நிகழ்வுகள்

    தனிச்சிறப்பு மிக்க சாகா சங்கம் 2007 முதல் பல தரமான சம்பவங்களைப் பார்த்துள்ளது . சங்கத்தில் வாய்விட்டு மாட்டிகொள்ளும் உறுப்பினர்களும் , தலைவரின் தாக்குதலால் நிலைகுலையும் உறுப்பினர்களுக்கும் நேர்ந்த நிகழ்வுகள் ஏறாளம் ஏறாளம் .  

    இந்த தாக்குதலால் நிலைகுலையும் ௨றுப்பினர் பலர் கோபப்படுவதும் ௨ண்டு. அவ்வாறு கோபப்பட்டு கேரளாவில் மாட்டிக்கொண்ட மாசாணம் ஏன் அன்று கோபப்பட்டோமோ என்று இன்றுவரை புலம்பிக்கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த பனை அதைப் பயன்படுத்திக் கொண்டு இன்று வரை சங்கத்தலைவரிடமிருந்து தப்பித்துக் கொள்கிறார் .

    இது மட்டும் அல்ல இத்தாக்குதலை தாங்காத ஓர் ௨றுப்பனர் நள்ளிரவு 12 மணிக்கு கூட செய்து கொண்டிருந்த சிக்கனை அப்படியே விட்டுவிட்டு ஓடும் நிலையும் , பின்பு மற்ற ௨றுப்பினர்கள் அவரை திரும்ப இழுத்து வந்த சம்பவும் நடந்தேரியுள்ளது.

    மேலும் கந்தசாமி அடி வாங்கியதை கேள்விப்பட்ட ௨ப்பிலிவாயன் அதை தலைவரிடம் சொல்லியிருக்கிறார் , அதற்கு தலைவர்  " சந்தோசப்பட வேண்டியவன் சந்தோசப்படாமல் நீ ஏன் சந்தோசப்படுகிறாய்" என்று கேட்டிருக்கிறார் . ௨டனே வடை   ,  சங்க தலைவர் கேட்ட கேள்விக்கு விடைளிக்க முடியாமல் கட்டிய லுங்கியுடன் வீடு நோக்கி ஓடிய சம்பவமும் நடந்தள்ளது.

    எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த சில வருடம் முன்பு தனக்கு யார் பாட்டில் மணி என்று பெயர் வைத்தது என்று கோபப்பட்ட உறுப்பினர் சங்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அது மட்டும் அல்ல சங்கத் தலைவருக்கு தனியாக "வெடி வைப்பேன்" ௭ன்றும் மிரட்டியுள்ளார்.

    இதே போல் பழனி அருகே சண்முகா நதியின் அருமை பெருமைகளைக் கூறிய நம் சங்கத்தின் மாணிக்கம் மாசாணம் அவர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் . 

    சங்கத்தின் பல ஓய்வு நாள் சுற்றுளாக்கள் பெரும்பாலும் உதகமண்டலத்திலேயே நடைபெற்றுவந்தது . அங்கும் பல பல சம்பவங்கள் நடைபெற்றன . முதன் முதலாக மாசாணம் சங்கத்தினருடன் கையில் பெட்டியோடு சுற்றுளா சென்ற இடமும் இங்குதான் . லவ்டேலில் புகைவண்டி தங்கும் இடத்தின் போர்வை அழுக்கானதால் அதை கோவை கொண்டுவந்து சலவை செய்து தரலாம் என்ற நல்ல எண்ணத்துடன் அதை எடுத்து வந்த அன்பரும் , நீலப்பறவையில் வாட்டர்கேன் மற்றும் டைரியுடன் உலாவந்த அன்பர்களும் உதகமண்டலத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர் . இவ்வாறு பல இன்புறும் நிகழ்வுகளைக் கொண்ட இந்த உதகமண்டலத்தில் நமது பொருளாதாராமும் செழிப்படையும் என்று நம்பி அணிக்கோரை அருகே ஒரு மாபெரும் திட்டத்தைக்கொண்டு பல கோடிகள் சம்பாதிக்கலாம் என்று கனவு காண்ட சாகா சங்கத்தின் சில உறுப்பினர்கள் துன்பப்பட்டு , துயரப்பட்டு , நஷ்டப்பட்டு நடுத்தெருவுக்கு வந்த நிகழ்வும் இங்குதான் நடைபெற்றது .

    இதுவரை சங்கத்தின் பல தாக்குதலில் இருந்து தப்பி வந்த பனை அவர்கள் நெல்லியாம்பதி சமபவத்திற்கு பின் எந்த தாக்குதலில் இருந்தும் தப்பவே இல்லை. நெல்லியாம்பதி சுற்றுளாவில் பனைக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது .  அது என்னவென்றால் துடியலூர்  முதல் போத்தனூர் வரை செல்லும் 4ம் எண் சிட்டி பேருந்தின் செயல்பாடு குறித்து சின்ன சந்தேகம் அடைந்த பனை அது குறித்து அதில் அதிகமான முறை பயணம் செய்த சாகா சங்கத் தலைவரிடம் சில கேள்விகள் கேட்டு இருக்கிறார் . தலைவர் என்ன கோபத்தில் இருந்தார் என்று தெரியவில்லை மிதி மிதி என்று மிதித்துவிட்டார் . அங்கு இருந்தவர்கள்  யாரும் அதைத் தடுக்காமல் தனது செல் போனில் படம் எடுத்துக்கொண்டிருந்தனர் . 

    இதேபோல் பனை அவர்கள் கோத்தகிரியில் யாருங்க அவரு? என்று கேட்டதற்கு மணியிடமும்  , ஆனைகட்டியில் அன்பிற்காக சொந்தத்துடன் பேசியது தவறு  என்று கூறி மாசாணத்திடமும் மிதிகள் வாங்கிய நிகழ்வுகளும் நடைபெற்றன . ஆனால் ஒன்றுதான் சங்கத்துக்கு புரியவில்லை  மாசாணம் ஏன் அன்று பனையை மிதித்தார் என்று தெரியவில்லை . ஏனென்றால் மாசாணம் அவர்கள் பல பேருக்கு அன்பு காட்டியுள்ளார் . அப்படியிருக்கையில் பனை காட்டிய அன்பு மட்டும் ஏன் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது என்று இன்றுவரை  புரியவில்லை .  ஆம் " அன்பு ஒன்றுதான் அனாதை " .

நிகழ்வுகள் .................. தொடரும் ............   

 

 

No comments:

Post a Comment